Thursday, November 4, 2010

தீபாவளியை முன்னிட்டு நரகாசுரன் சிறப்பு மலர் 16 பக்கங்களுடன்

நண்பர் ஒருவர் கீழ்கண்டவாறு இந்த மலரை வெளியிடும் நாத்திகர்களை பற்றி கீழ்க்கண்டவாறு சொன்னார்.
நரகாசுரனின் பிறப்பால் தமிழனென்றும் , அவனுக்கு மலர் வெளியிடுவதும்....பக்தர்கள் நம்பாவிட்டாலும் கூட புராணக்கதைகளை நம்புவது இவர்கள்தான் என்றாகிவிட்டது!
அந்த நண்பருக்கு கொடுத்த பதிலையும் இங்கே வெளியிட்டால் இத்தகைய சிந்தனை கொண்ட மற்றவர்களுக்கும் புரிதல்  வரும் என்கிற அடிப்படியில் அதும் இங்கே தருகிறேன் .இதோ அந்த பதில் :
நரகாசுரன் என்கிற ஒருவன் என்பது கற்பனை கதையே ஆனாலும் .அவ்வாறு அரக்கர்கள் என்பது ஆரிய எதிரிகளான திராவிடர்களையே என்பது வரலாற்றாளர்களின் நோக்கு.

அவ்வாறு திராவிடர்களை இழிவு படுத்தும்போது நரகாசுரன் என்கிற கற்பனை கதாபாத்திரத்தை ஆரியர்களை எதிர்க்கும...் நரகாசுரனை சிறப்பித்து மலர் வெளியிடுவதன் மூலம் நாத்திகர்கள் ஆரியத்தை எதிர்க்கிறோம் என்று பொருள்.

இந்த கதையே பொய் என்று கூறினால் அதை கொண்டாடதிர்கள் என்று யாரவது சொல்லி இருந்தால் அவர்களை நாத்திகர்கள் ஆதரித்தே வந்து இருக்கிறார்கள்.மாறாக நாங்கள் அவர்களிடம் நரகாசுரன் என்கிற ஒருவன் வாழ்ந்தான் என்று விவாதம் செய்வதில்லை.

இதே பாணியில் தான் வட நாட்டில் இராவணா லீலா கொண்டாடினால் இங்கே ராமலீலா கொண்டாடினோம் .இந்த ராமலீலா வை போலவே தான் இந்த நாரகாசுரன் மலரும்.

ராமாயணத்தை எதிர்த்து ராவணனை கதாநாயகனாக வைத்து புலவர் குழந்தை இராவண காவியம் என்கிற நூலை படைத்தார்.

நாத்திகர்கள் இவ்வாறு அசுரர்களை ஆதரிப்பது ஆரியர்களை எதிர்த்து மக்கள் மத்தியில் விழிப்பை ஏற்படுத்தவே.

நாத்திகர்கள் யாரும் அசுரனக்கு கோவில் கட்ட வேண்டும்,அசுரன் இங்கு தான் பிறந்தான் எனவே இங்கு தான் அவனுக்கு கோவில் கட்ட வேண்டும் என்று சொல்வதில்லை என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.

இந்தகைய புராணகள் ஒழிந்தால் நாத்திகர்கள் யாரும் அதற்க்கு மலர் வெளியிட வேண்டிய அவசியமோ ,லீலைகள் கொண்டாட வேண்டிய அவசியமோ இருக்காது.

நாத்திகர்களுக்கு எதிரிகளாக இருப்பவர்களை அவர்கள் எதிர்க்கும்போது ,அவர்களின் எதிரிகளின் எதிரிகளை யும் ஆதரித்தல் கொள்கைக்கு பலம் தானே.
தீபாவளி ஒழியும் நாள் நரகாசுரன் மலரும் ஒழியும் என்று பொருள் கொள்ளுங்கள்.
கடவுள் மதம் ஒழிந்தால் பெரியாரின் கொள்கையும் தேவை இல்லை என்று பொருள் கொள்ளுங்கள்.
ஒவ்வொரு புகை படத்தின் மீது அழுத்தி அதற்குரிய செய்திகளை படிக்கலாம்
















No comments:

Post a Comment